தம்புள்ளை இனாமலுவ வனப்பகுதியின் திகம்பதஹ பகுதியில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று யானைகளின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்த யானைகளில் யானை ஒன்றின் தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த யானை இறப்புகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.