
அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காலத்தை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த மாதம் 31 ஆம் திகதி வரை அந்தக் காலத்தை நீட்டிக்க சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக 39,707 மேன்முறையீடுகளும் 3,183 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.