
இன்றும் (22) ஆகஸ்ட் 5ஆம் திகதியிலும் பூமி அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் வரையிலான குறுகிய மாற்றம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது மனிதர்களால் பார்க்க முடியாது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 9 ஆம் திகதி அன்று, பூமி இதுவரை பதிவு செய்யப்படாத மிகக் குறுகிய நாட்களில் ஒன்றையும் பதிவு செய்திருந்தது.
சந்திரனின் தற்போதைய சுற்றுப்பாதை நிலை பூமியின் சுழற்சியை நுட்பமாகத் துரிதப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றம் சந்திரன் மற்றும் சூரியனால் செலுத்தப்படும் ஈர்ப்பு விசை, பூமியின் மேற்பரப்பின் புவியியல் செயல்பாடு, காற்றின் வடிவங்கள் மற்றும் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த மூன்று நாட்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாட்களாக இருக்கும் என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.