நாளை அதிக வெப்பமான வானிலை நிலவும் !



நாட்டின் பல பகுதிகளில் நாளை (31) அதிக வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலில் கவனம் செலுத்த வேண்டிய வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.