வில்பத்து தேசிய பூங்காவிற்குள் உள்ள குக்குல்கட்டுவ - பிட்டுவ வனவிலங்கு வலயத்தில் கர்ப்பிணி மானை சுட்டுக் கொலை செய்த ஐந்து பேர் வியாழக்கிழமை (28) வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 31, 40 மற்றும் 52 வயதுடைய சந்தேகநபர்கள் ரனோராவ, நொச்சியாகம மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றினர்.
வரட்சியான காலங்களில் தண்ணீரைத் தேடி தேசிய பூங்காவிற்குள் சுற்றித் திரியும் காட்டு விலங்குகளை இரவில் வேட்டையாடுவதில் இந்த குழு பலமுறை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் விலங்குகளைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
வில்பத்து தேசிய பூங்கா அதிகாரிகளால் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.