தனது முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை குடிக்க கொடுத்து தங்க நகைகளை திருடிய சாரதி கைது





தனது முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பயணிகளுடன் நற்பாக பழகி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர்களுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை குடிக்க கொடுத்து தங்க நகைகளை திருடிச் செல்லும் சாரதி ஒருவர் புறக்கோட்டை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (30) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் திருடிய தங்க நகைகளை விற்பனை செய்த அடகு கடைகளின் துண்டுச்சீட்டுகள் என்பன சந்தேக நபரான முச்சக்கரவண்டி சாரதியிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.