இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
விடுதியின் உரிமையாளர், உயிரிழந்த பெண் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் அறையை திறந்து சோதனை செய்து பார்த்த போது பெண்ணின் சடலத்தை கண்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.