
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வயது பிள்ளை தீக்காயங்களால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாய், தந்தை மற்றும் தாயின் தகாத உறவு கணவர் ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (10) காலை பலாங்கொடை பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெந்தி முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கவனயீனமாக செயற்பட்டு பிள்ளைக்கு பாதுகாப்பை வழங்குவதில் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டுகளின் பேரில் தாய் மற்றும் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தாயின் தகாத உறவு கணவருக்கு பல பிடியாணைகள் இருப்பதால், அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், இறந்த பிள்ளையின் பிரேத பரிசோதனை பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, இறுதி சடங்குகளுக்காக உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.