நீதிமன்றத்திற்குச் செல்லும் வீதியில் போராட்டத்தை நடத்தியோரை புகைப்படங்கள் மூலம் அடையாளம் !


கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் செல்லும் வீதியில் போராட்டத்தை ஏற்பாடு செய்த நபர்கள், புகைப்படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை ஏற்பாடு செய்த நபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, புகைப்படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிணையைப் பெற்றுக் கொள்வதற்காக இது போன்ற போராட்டம் இதற்கு முன்னர் நடைபெறவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், இது போன்ற போராட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் தடவை என்றும் தெரிவித்துள்ளார்.இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த குழுக்கள் மீது, பொலிஸார் அதீத கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.