விரலடையாள இயந்திரங்களில்லாத அரச நிறுவனங்களுக்கு விரைவில் விரலடையாள இயந்திரம் !


விரலடையாள இயந்திரங்களில்லாத அரச நிறுவனங்கள் சகலவற்றிலும் விரைவில், இயந்திரங்களூடாக வரவுக் கையொப்பம் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அரச நிறுவனங்கள் பலவற்றில் விரலடையாள பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், பல நிறுவனங்கள் இன்னும் இந்த முறையைப் பின்பற்றவில்லை என, அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித் அமைச்சர்:

தற்போதைய அரசாங்கம் கூடுதல் நேரக் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவுகள் துல்லியமாக வழங்கப்படுவதை உறுதி செய்வது அவசியம்.பொது ஊழியர்களுக்கு பொது நிதியில் ஊதியம் வழங்கப்படுவதால், சம்பளம் மற்றும் கூடுதல் நேரக் கொடுப்பனவுகள் முறையாகக் கணக்கிடப்பட வேண்டும். இந்தச் செயல்பாட்டில் துல்லியம் மற்றும் பொறுப்புணர்வைப் பேணுவதில், விரலடையாள பதிவு இயந்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.