வாசனை திரவியங்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக இலத்திரனியல் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 3.5 மில்லியன் ரூபாய் மதிப்புடைய 620 இலத்திரனியல் சிகரெட்டுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த இலத்திரனியல் சிகரெட்டுகள் இனிப்பு பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களில் மறைத்து இறக்குமதி செய்யப்பட்டு, 8000 -10000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் ,சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.