கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம் (EIA) என்பது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களைக் கொண்ட ஒரு தன்னார்வ அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டும், EIA பல்வேறு கல்வி மற்றும் சமூக திட்டங்களை மேற்கொள்கிறது, இதில் முக்கியமாக கிராமப்புற மாணவர்களை சித்தியடைய செய்வதற்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மாணவர்கள் விஞ்ஞானத்துறையை தெரிவு செய்வதை ஊக்கமளிக்கும் விதமான கருத்தரங்குகள், Physics செயல்முறை கருத்தரங்குகள் , Biology பாடம் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க மருத்துவ பீடம் அழைத்து செல்வது மற்றும் YouTube channel ஊடாக கடந்த கால உயர்தர பரீட்சை வினாக்களுக்கான விளக்கங்களைப் தரவேற்றம் செய்தல் ஆகியவை அடங்கும். இவற்றுடன் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் இரத்த தான முகாம் போன்று கல்வி மட்டுமல்லாது சமூக சார்ந்த சேவையிலும் தீவிரமாக ஈடுபடுகின்றது.
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்கள், EIA 2022 குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட Car wash மூலம் திரட்டப்பட்ட நிதியில் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:
1. பொன்னியின் செல்வன் - பாகம் 1
2. பொன்னியின் செல்வன் - பாகம் 2
3. பொன்னியின் செல்வன் - பாகம் 3
4. பொன்னியின் செல்வன் - பாகம் 4
5. பொன்னியின் செல்வன் - பாகம் 5
6. சேப்பியன்ஸ் - மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
7. விவேக்கும் 41 நிமிடங்களும் Rajesh Kumar
8. சிதறா கவனக்குறிப்பு - கிறிஸ் பெய்லி
9. கருவாச்சி காவியம் - வைரமுத்து
10. இலகுமுறை சேதன மாற்றீடுகள் - அருண பண்டார
11. அசேதன இரசாயனவியல் - அருண பண்டார
12. கைத்தொழில் இரசாயனம் - அருண பண்டார
13. கைத்தொழில் இரசாயனம் வினாவங்கி - அருண பண்டார
14. மின்னிரசாயனம் - அருண பண்டார
15. பொது இரசாயனம் அடிப்படை பயிற்சிகள் - அருண பண்டார
16. பொது இரசாயனம் அணுக்கட்டமைப்பும் பிணைப்புக்களும் மாதிரி பல்தேர்வு வினாக்கள் - அருண பண்டார
17. இரசாயனம் மாதிரிப்பத்திர வங்கி - அருண பண்டார
18. கைத்தொழில் இரசாயனம் - அருண பண்டார
19. கைத்தொழில் இரசாயனம் வினா வங்கி - அருண பண்டார
20. விஞ்ஞானம் தரம் 10 ( பகுதி 1 ) - க. யோகராஜா
21. விஞ்ஞானம் தரம் 10 ( பகுதி 2 ) - க. யோகராஜா
22. நுண்கணிதம் - கணேசலிங்கம்
23. மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் - N. செல்வராஜா
24. நிகழ்தகவும் புள்ளிவிபரவியலும் பயிற்சிகள் - கணேசலிங்கம்
25. உயிரியல் வழிகாட்டி ( பகுதி 1 ) - குணம் சவரிராஜா
26. உயிரியல் வழிகாட்டி ( பகுதி 2 ) - குணம் சவரிராஜா
27. உயிரியல் வழிகாட்டி ( பகுதி 3 ) - குணம் சவரிராஜா
28. உயிரியல் கடந்த 35 வருடத்திற்கு மேற்பட்ட MCQ பல்தேர்வு வினாக்களும் விடைகளும் - Astan publications
29. இரசாயனவியல் கடந்த 35 வருடத்திற்கு மேற்பட்ட MCQ பல்தேர்வு வினாக்களும் விடைகளும் - Astan publications
30. இரசாயனவியல் பரீட்சை வினாக்களும் விடைகளும் - Astan publications
31. பௌதீகவியல் கடந்த 35 வருடத்திற்கு மேற்பட்ட MCQ பல்தேர்வு வினாக்களும் விடைகளும் - Astan publications
32. பௌதீகவியல் பரீட்சை வினாக்களும் விடைகளும் - Astan publications
33. இணைந்த கணிதம் பரீட்சை வினாக்களும் விடைகளும் - Astan publications
34. உயிரியல் மாதிரி வினாத்தாள்களும் விடைகளும் - Loyal publications
35. உயிரியல் கடந்தகால பரீட்சை வினாவிடைகளுக்கான விளக்கவுரைகள் 2019,2020,2021,2022 - Panuval book mart
36. அமிர்தம் என்றால் விஷம் - ராஜேஷ்குமார்
37. ஹைடெக் தாதாக்கள் - ராஜேஷ்குமார்
38. Secret சக்தி - ரோண்டா பைர்ன்
39. Secret மாபெரும் ரகசியம் - ரோண்டா பைர்ன்
40. சுற்றாடல் உயிரியல் - Sivakumaran
41. விலங்கு அமைப்பும் தொழிலும் - Sivakumaran
42. மூலக்கூற்று உயிரியலும் மீளச் சேர்க்கைக்குரிய DNA தொழில்நுட்பமும் - Sivakumaran
43. பிறப்புரிமையியல் - Sivakumaran
44. ஒரு யோகியின் சுயசரிதை
45. கவலை வேண்டாம் - Shunmiyo Mashuno
46. ரசவாதி - பாலோ கொயலோ
47. இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு
48. உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் - வில்லி ஜாலி
49. Secret கதாநாயகன் - ரோண்டா பைர்ன்