முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதிபதி அசங்கா எஸ். போதரகம முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் மேலதிக சாட்சியங்களை நவம்பர் 10 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக ஒரு போராட்டம் நடத்தப்பட்டதாகவும், வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் கூறி கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது