(செங்கலடி நிருபர் சுபஜன்)
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தீர்மானத்தை மீறி ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்பு நடாத்திய 06 கல்வி நிலையங்களுக்கு இன்று காலை திடீர் விஜயம் ஒன்றை ஏறாவூர் பற்று செங்கலடி தவிசாளர் மு.முரளிதரன் மேற்கொண்டுள்ளார்.
ஞாயிறு தினங்களில் இந்து ஆலயங்களில் இடம்பெறும் அறநெறி வகுப்பு மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாடசாலை மாணவர்கள் செல்லுதல் உள்ளிட்ட கோரிக்கைக்கு அமைய மாணவர்களுக்காக ஞாயிறு தினங்களில் முழு நாள் வகுப்பு தடை மேற்கொள்ளுமாறு செங்கலடி பிரதேச சபையினால் தீர்மானம் அன்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த பிரதேச சபையின் தீர்மானத்தை மீறி இன்று 31-ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வகுப்புக்களை நடாத்திய தனியார் கல்வி நிலையங்களை சென்று பார்வையிட்ட தவிசாளர் - நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதே வேளை இன்றைய தவிசாளர் உள்ளிட்ட குழுவினரின் தனியார் கல்வி நிலையங்களின் விஜயத்தின் போது - மாணவர்களின் நலன் கருதி விடுமுறை வழங்குமாறும் , பிரதேச சபையுடன் தொடர்புகொண்டு வகுப்பு நடாத்த வேண்டிய தேவை இருப்பின் அது தொடர்பில் கலந்துரையாடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், கல்வி நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கை தொடர்பிலும் கவணம் செலுத்துமாறும் தவிசாளர் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக இவ்வாறு தனியார் வகுப்பு நடாத்தும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு பிரதேச சபை செல்லும் எனவும் தவிசாளர் மு.முரளிதனர் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------
இதே வேளை கடந்த ஆகஸ்ட் 21 திகதி ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக.
21.08.2025
ஏறாவூர் பற்று செங்கலடியில் தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடனான பிரேரனை நிறைவேற்றம் - மீறும் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் தனியார் வகுப்புக்களை இனிவரும் காலங்களில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் முழு நாள் வகுப்பு நடாத்த தடை செய்து சபையில் ஏகமனதாக பிரேரனை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் நிறைவேற்றம்.
அத்துடன் சாதாரனதர / உயர்தர மாணவர்களின் வகுப்புகளுக்கு சபை அனுமதி பெற்று நடாத்த விசேட அனுமதி
தனியார் வகுப்புக்களில் பிரியாவிடை நிகழ்வுகள் நடாத்த முற்றாக தடை.
தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்க்க அதி கூடிய பதிவுக் கட்டணம் - 500/-
தரம் 6-9 - கட்டணம் மணித்தியாளத்திற்கு 50/-
தரம் 10-11 கட்டணம் மணித்தியாளத்திற்கு 60/-
கலைத்துறை , வணிகத்துறை தொழில்நுட்பதுறை மணித்தியாளத்திற்கு 70/-
விஞ்ஞானதுறை , கணிததுறை மணித்தியாளத்திற்கு 100/- - 150/-
மீறும் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம்.