ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை



தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆகஸ்ட் 29 ஆம் திகதி காலை ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து.