மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட விற்பனை சந்தையும், கண்காட்சியும் - 2025

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது நேற்று (2025.10.13) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையின் கீழ், உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு இக் கண்காட்சி மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் போது பிரதேச செயலக பிரிவிலிருந்து 20 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி மற்றும் கைவினை பொருட்களை காட்சிப்படுத்தியதுடன், விற்பனையும் செய்திருந்தனர்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகரத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் மற்றும் விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட விற்பனை சந்தையும், கண்காட்சியும் - 2025

Posted by Battinews on Tuesday, October 14, 2025