கொள்ளையர்கள் 40 பவுண் நகைகள், 15 இலட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் உரிமையாளரான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இது தொடர்பில் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அத்துடன், குறித்த வீட்டின் உரிமையாளர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.