தங்கத்தின் விலைகள் நேற்று இரு தடவைகள் அதிகரிப்பு !


தங்கத்தின் விலைகளில் நேற்று மாத்திரம் இரண்டு தடவைகள் மாற்றம் ஏற்பட்டதாக கொழும்பு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. அந்த வகையில் நேற்றுக்காலை 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்து வந்த நிலையில், பிற்பகலில் அது 5000 ரூபாவால் அதிகரித்து 24 கரட் தங்கம் ஒரு பவுண் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் 3 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்தது.அந்த வகையில் 24 தங்கம் ஒரு கிராமின் விலை 43,125 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 39, 875 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சங்கம் தெரிவித்தது.