இந்த பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின், பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளார்.
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
அரை டிரில்லியன் செல்வத்தை சம்பாதித்த முதல் நபர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.
டெஸ்லாவின் பங்கு மீட்சி, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏ.ஐ நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்ததன் மூலம் இந்த சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு 14 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.
அதேநேரத்தில் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசனின் சொத்து மதிப்பு எலான் மஸ்கை விட மிகவும் பின்தங்கியுள்ளது.
தற்போது லாரி எலிசனின் மொத்த சொத்து மதிப்பு 351.5 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.