காத்தான்குடியில் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல வர்த்தகர் கைது !


மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அதி கூடிய ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் முஸ்லிம் கொலணியைச் சேர்ந்த 29 வயதுடைய என்பதுடன் அவரிடமிருந்து 51 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுவே கிழக்கு மாகாணத்தில் கைப்பற்றப்பட்ட அதிக்கூடிய ஐஸ் போதைப் பொருள் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

முஸ்லிம் கொலணி பிரதேசத்திலிருந்து காத்தான்குடிக்கு விற்பனைக்காக குறித்த ஐஸ் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டமை பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 17 இலட்சம் பெறுமதியுடையது என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.