மொனராகலையில் பிபில பஸ் தரிப்பிடத்தில் மதுபோதையில் சிறுமியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை பிணையில் விடுதலை செய்யுமாறு பிபில நீதவான் தயாகா சில்வா கடந்த வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.
கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த வெள்ளிக்கிழமை (10) பிபில பஸ் தரிப்பிடத்தில் வைத்து பத்து வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 03 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அத்துடன் இந்த வழக்கு ஒக்டோபர் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.