அநுராதபுரம், தலாவ, இரத்மல்கஹவெவ வீதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் ஒரு தொகை தோட்டாக்கள் தரையில் விழுந்து கிடந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
தரையில் தோட்டாக்கள் விழுந்து கிடப்பதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸாருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (14) தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தோட்டாக்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தோட்டாக்கள் ரி 56 ரக துப்பாக்கிக்குரியவை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.