மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கத்தால் 'தூய்மையான இலங்கை' திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு புகையிரத நிலையம் தூய்மைப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கக்கப்பட்டுள்ளது.


(சித்தா)

மட்டக்களப்பு சாரண சங்கமானது இலங்கை ஜனாதிபதி அவர்களின் சிந்தனையுpல் உருவான 'தூய்மையான இலங்கை' (ஊடநயn ளுசடையமெய) திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. இலங்கை சாரண தலைமையகத்தின் வழிப்படுத்தலின் கீழ் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் புகையிரத நிலையங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அழகுபடுத்தி மக்கள் விரும்பும் இடமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கத்தால் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களைக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது இதில் அதிதியாக மட்டக்களப்பு நகரபிதா சிவம் பாக்கியநாதன் பலந்து கொண்டார்.

இலங்கையில் (ஊடநயn ளுசடையமெய) திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுள் உதவி மாவட்ட ஆணையாளரின் (பயிற்சி) முன்வைப்புக்கு அமைவாக முன்வைத்தார்  இலங்கையில் முதல் கட்டமாக 110 புகையிரத நிலையங்களில் இச்செயல் திட்டம் வெற்றிகரமாக  முன்னெடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தினை சாரணியத்தின் தந்தை எனப்போற்றப் படுகின்ற 'ரொபேட் கில்வெல் பேடன் பவல் பிரபு' அவர்களின் பிறந்த தினத்தில் ;நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2025.மாசி மாதம் 22ம் திகதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதற் கட்டமாக சுற்றுப்புறச் சூழலை சுத்தம் செய்து அழகுபடுத்தும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டது. 

அவ்வேளையில் எமது தூய்மையான இலங்கை (ஊடநயn ளுசடையமெய) திட்டத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் சாரண தலைமையகத்தின் ஆணையாளருமான பொ.சசிகுமார் அவர்களின் தலைமையில் இங்குள்ள குறைபாடுகள் பல இனங்காணப்பட்டன அவற்றுள் பாவிக்கப்படாமல் கைவிடப்பட்ட மலசல கூடங்களை திருத்தியமைத்தல் பாலுட்டும் தாய்மாருக்கான வசதிகளுடன் கூடிய பிரத்தியேக அறையினை அமைத்தல்  என்பன அத்தியாவசிய தேவைகளாக இனங்காணப்பட்டன. எமது தூய்மையான இலங்கை (ஊடநயn ளுசடையமெய) திட்டத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் புகையிரத நிலைய அதிபரிடம் மேல் குறிப்பிடப்பட்ட வேலைத்திட்டங்களை நாம் விரைவில் பூர்த்தி செய்து தருகிறோம் என உத்தரவாதமளித்தார்  அப்போது இது எப்படி சாத்தியமாகும் என பலரும் சிந்தித்தனர் அசாத்தியத்தை சாத்தியமாக்குபவனே சாரணன் என்னும் வாக்கியத்திற்கு ஏற்ப இவ்வேலைத்திட்டத்தை  சிறப்பாக பூர்த்தி செய்து நாங்கள் சாரணர்கள் தான் என்பதை அவரது அணியுடன் நிருபித்துக் காட்டியிருக்கிறார்.

ஜனாதிபதி விருதினைப் பெறவுள்ள சாரணர்கள் சமூக வேலைத்திட்டம் ஒன்றைப்பூர்;த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது அதற்கமைய அவர்களின் வேலைத்திட்டங்களை புகையிரத நிலையங்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டார்கள் மட்ஃ புனித சிசிலியா பெண்கள்  பாடசாலை சாரணர்கள் இணைந்து மலசல கூடத்தினையும் தாய்மாருக்கான பிரத்தியேக அறையினையும் சிறப்பாக திருத்தியமைத்தார்கள் பழைய சுவர் ஓடுகள் தரையோடுகள் அகற்றப்பட்டு புதிய  சுவரோடுகளும் தரையோடுகளும் பதிக்கப்பட்டன  மேலும் குளியலறை பேசின்கள் கொமட் என்பனவும் புதிதாக பொருத்தப்பட்டதோடு கூரை மின் விசிறி சுவர் மின் விசிறிகளும் பொருத்தப்பட்டன தாய்மாருக்கான பிரத்தியேக அறையும் ஒழுங்கமைக்கப்பட்டு அவர்களின் வசதிக்காக அங்கும் பேசன் பொருத்தப்பட்டது மேலும் சீரற்றிருந்த மின் இணைப்புக்களும் நீர் இணைப்புக்களும் திருத்தி அமைக்கப்பட்டதோடு புதிய இணைப்புக்களும் செய்யப்பட்டது. 

இதே போல் மெதடிஸ்த மத்திய கல்லூரி சாரணர்கள் புகையிரத முகப்பில் உள்ள சுற்றுவட்டத்தை புனரமைப்புச் செய்து தீந்தை பூசி அழகுபடுத்தினர் அதில் ஜனாதிபதி விருது பெறவுள்ள சாரணர்களும் பிரதம மந்திரி விருது பெறவுள்ள சாரணர்களும் ஈடுபடுத்தப்பட்டனர் சுமார்  இதனோடு இணைந்ததாக தாய்மாருக்கான பிரத்தியேக அறைகளுக்கான கதிரை வசதிகளையும் மேற்படி பாடசாலை அமைத்துக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது 

இதே போல் வின்சன்ற் பெண்கள் உயர் தர பாடசாலையின் பிரதம மந்திரி விருது பெறவுள்ள சாரணர்கள் பூந்தொட்டிகள் வைத்து அழகுபடுத்தல் தீந்தை பூசுதல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர் இவ் வேலைத்திட்டங்களை சம்மந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களுடன் இணைந்து மட்டக்களப்பு நகருக்குப் பொறுப்பாகவுள்ள உதவி மாவட்ட ஆணையாளர் திரு. சந்திரசுசர்மனின் மேற்பார்வையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இவ் வேலைத்திட்டம் சிறப்பாக இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக கிழக்குமாகாண 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்ட இணைப்பாளரும் அவரது குழுவினரும் அடிக்கடி வருகை தந்து ஆலோசனைகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது 

இதனடிப்படையில் மேற்படி வேலைத்திட்டத்தினை முதல் முதலாகவும் சிறப்பாகவும் முன்னெடுத்த மாவட்டம் என்னும் பெருமையை எமது மாவட்டம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது இப்பெருமையை எமக்குப் பெற்றுத்தந்த  தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கிழக்குமாகாண இணைப்பாளரும் தலைமையக ஆணையாளருமான திரு.பொ.சசிகுமார் அவர்களுக்கு மாவட்ட சாரண சங்கம் நன்றி கூற கடமைப்பட்டுளளது.

 புதிய நிருவாகம் மட்டக்களப்பு மாவட்டத்தை பெறுப்பேற்கின்ற போது  ஆயிரத்து அறுநூறு (1600) சாரணர்கள் கணக்கெடுப்பு பட்டியலில் இருந்தார்கள்  ஆனால் இன்று அத்தொகையானது நான்காயிரத்து இருநூறாக (4200) அதிகரித்துள்ளது இதன் காரணமாக மட்டக்களப்பு சாரண வரலாற்றில் அகில இலங்கை ரீதியாக எமது மாவட்டம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது இதனைக் கௌரவிக்கும் முகமாக சாரண தலைமையகத்தால் வெற்றிக்கேடயம்  மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பக்கபலமாக நின்று உழைத்த சாரண தலைவர்கள் மாவட்ட சாரண தலைவர்கள் உதவி மாவட்ட ஆணையாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் அப்பிள்ளைகளை இணைக்க முன் வந்த பெற்றோர்களுக்கும் பாராட்டப்படவேண்டியவர்கள்;.

மேலும் அதற்கான வழிப்படுத்தல்களை முறையாக மேற்கொண்ட தலைமையக ஆணையாளர் பொ.சசிகுமார் அவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின்  பதில் மாவட்ட சாரண ஆணையாளர் அமிர்தன் கார்மேகம், சாரண சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன், சாரண சங்கத்தின் தவிசாளரும் தற்போது வடமாகாண கல்விப்பணிப்பாளருமான ஜெயச்சந்திரன் அவர்களும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டப்படவேண்டியவர்கள்.