வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாட்டில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 250 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பாரிய வெள்ளப்பெருக்குக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.