பெரியகல்லாறு பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற மாணவர்களுக்கான சித்திரப் போட்டி.

(ரவிப்ரியா)
தேசிய.வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பெரியகல்லாறு பொது நூலக மாணவர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்வுகளை இம்மாதம் பூர்வமாகவும் நடாத்த ஆரம்பித்திருக்கின்றது.

அந்த வகையில் தரம் 6 மாணவர்களுக்கான சித்திரப் போட்டி இன்று செவ்வாய் (14) காலை நூலக மண்டபத்தில் நூலகர் கு.றிஹானா ஹாலித் தலைமையில் சிறப்பாக நடைபெற்றபோது மாணவர்கள் மிகவும் உற்சாகமாகப் பங்குபற்றினர்.

தொடர்ந்து மாணவர்களுக்கான வினா விடை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் கிரமமாக நடைபெற இருப்பதாகவும், வலதுகுறைந்தோர், சிறுவர் மற்றும் முதியோர் காப்பகங்களிலும் பொருத்தமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  நூலகர் றிஹானா தெரிவித்தார்.