தம்புள்ளையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) திடீரென உயிரிழந்த நிலையில், பிரதே பரிசோதனையில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தம்புள்ளையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பரீட்சைக்கு தோற்றவிருந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) காலை தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமல் இருந்ததால் அவரது பெற்றோர் அவரை தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள், மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதையடுத்து, மாணவி தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாணவி தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


.jpeg)





.jpeg)



.jpeg)