மட்டக்களப்பில் பெய்துவரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய வீதிகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல்வேறு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாய்ந்தகல் பாதையினூடாக இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.