மட்டக்களப்பு சிறையிலுள்ள கைதிகளின் மனிதாபிமான நடவடிக்கை !


மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக வெள்ளிக்கிழமை (05) கையளித்துள்ளனர்.

இவ்வுலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டு பின்னர் அவை மட்டக்களப்பு கச்சேரியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் நேரில் சென்று கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான சிறைக்காவலர் ரத்நாயக்க உள்ளிட்ட ஏனைய உத்தியோதர்களும் பங்கு பற்றியிருந்தனர்.