15 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தம்பதி கைது


சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் இன்று திங்கட்கிழமை (12) அதிகாலையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடைய திருமணமான தம்பதிகள் என தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை 02.30 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-394 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

06 சூட்கேஸ் பெட்டிகளில் 100,000 வெளிநாட்டுத் தயாரிப்பு "பிளாட்டினம்" சிகரெட்டுகள் மற்றும் 500 அட்டைப்பெட்டிகளில் சிகரெட்டுகளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.