
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என குறித்த பெண்ணின் உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த அ. கான்சியூஸ் சகாய கீர்த்தனா வயது (21) எனும் திருமணமான இளம் குடும்பப் பெண்ணை அவரது கணவர் நேற்றைய தினம் சனிக்கிழமை ( 10) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
தனது மனைவியை கணவன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக விட்டு, வீடு திரும்பி சிறிது நேரத்தில் தனது மனைவியை அழைத்துச் செல்ல மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் மனைவியை வைத்தியசாலையில் காணவில்லை.
இந்நிலையில், கணவர் மற்றும் உறவினர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் குறித்த குடும்ப பெண் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டியில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து வவுனியா பேருந்தில் பயணித்து உள்ளமை தெரியவந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்ப பெண் காணாமல் போனமை குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)





.jpg)

