500-க்கும் மேற்பட்ட குடிபோதைச் சாரதிகள் கைது


நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (10) நாடு முழுவதும் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 275 பேரும், திறந்த பிடியாணை கொண்ட 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 5,283 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.