
தரம் 6 ஆங்கில அச்சுப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தலத்தை உட்புகுத்திய நபர் யார் என்பதை இனம் கண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அப்படியாயின் குற்றப்புலனாய்வு பிரிவு அந்த நபரை கைது செய்து ஏன் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை என கேட்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய ஆங்கில புத்தக தொகுப்பு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலசக் கல்வியை பாதுகாக்குமாறு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சி மத்துகமவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும்போது, அதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹொட்டஅச்சி, பெண்கள் சிலரை ஒன்றிணைத்துக்கொண்டு பிரதமரை பாதுகாத்துக்கொள்ள ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். உண்மையில் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதமரை பாதுகாப்பதற்கு முன்னர்.
உகண்டாவில் இருக்கும் பணத்தை கொண்டுவர தேவையில்லையா? என மக்களை கேள்வி கேட்டு வந்தார். அதனால் அவர் மக்களுக்கு பொய் வாக்குறுதி வழங்காமல், உகண்டாவில் இருக்கும் பணத்தை நாட்டுக்கு கொண்டுவரவே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அதனால் தற்போது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அரசாங்கத்தை பொறுப்பேற்றால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற செயற்பட வேண்டும்.
அத்துடன் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி, கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்வதாக தெரிவித்து தரம் 6 மாணவர்களின் பாடப்புத்தகத்தில் ஏன் இந்த சர்ச்சைக்குரிய வலைத்ளத்தை புகுத்தினார். இது எதிர்பார்க்காமல் இடம்பெற்ற ஒன்றாக இருக்க முடியாது. இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுஹேவாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பும்போது, இந்த சர்ச்சைக்குரிய வலைத்தளத்தை பாடப்புத்தகத்தில் உட்புகுத்திய நபரை இனம் கண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதேநேரம் நாலக்க கலுஹேவா இதற்கு முன்னர் இந்த சர்ச்சை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை செய்திருநதார். அவரின் இந்த முறைப்பாட்டுக்கமை, குற்றப்புலனாய்வு பிரிவு அல்லது வேறு விசாரணை பிரிவினர், கல்வி அமைச்சின் செயலாளர் இனம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நபரை அழைத்து இதுதொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளதா என கேட்கிறோம். நாங்கள் அறிந்த அளவில் அவ்வாறான எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதனால் சர்ச்சைக்குரிய வலைத்தளத்தை பாடப்புத்தகத்தில் புகுத்திய நபர் இனம் காணப்பட்டிருந்தால், அவரை கைதுசெய்து ஏன் இதுுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை. அப்படியானால் குறித்த நபர் இந்த நடவடிக்கையை அவர் தனது அபிப்பிராயத்தின் பிரகாரம் உட்புகுத்தவில்லை. மாறாக அவருக்கு கிடைத்த உரத்துவுக்கமையவே மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது தெவாகிறது.
எனவே கல்வி அமைச்சர் என்றவகையில் பிரதமர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் ஆரம்பத்தில் இருந்து இருந்துவந்த நிலைப்பாடே தற்போது, அவரின் ஆலாேசனையின் பிரகாரம் இடம்பெற்றிருக்கிறது. பிரதமர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடும்போதும், குறித்த வலைத்தளம் பாடப்புத்தகத்தில் புகுத்தப்பட்டுள்ளபோதும் அதன் ஊடாக பிரவேசிக்குமாறு அதில் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். இவர்களின் இந்த கூற்றின் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாடே பாடப்புத்தகத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது என்றார்.




.jpg)





.jpg)

