வலம்புரிச் சங்குகள், மாணிக்க கற்களுடன் 6 பேர் கைது !


மாவனெல்லை மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வலம்புரிச் சங்குகள் மற்றும் மாணிக்க கற்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 6 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மாவனெல்லை, திருகோணமலை, நாவலப்பிட்டி மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.