
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து புவிசார் அரசியல் பதட்டங்கள் தொடர்பான முதலீட்டாளர்களின் கவலைகளினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, ஆசிய சந்தையில் திங்கட்கிழமை காலை தங்கம் ஒரு அவுன்ஸ் சுமார் 1.8 சதவீதம் அதிகரித்து சுமார் $4,408 (£3,282) ஆக இருந்தது. அதேவேளை, "பாதுகாப்பான முதலீடு" சொத்துக்கள் எனக் கருதப்படும் சொத்துகளுக்குள் முதலீடு மாற்றப்பட்டதையடுத்து, வெள்ளியின் விலை சுமார் 3.5 சதவீதம் அதிகரித்தது.
இந்நிலையில், மசகு எண்ணெய் விலைகள் பெரிதாக மாற்றமின்றி நிலைத்திருந்தன. அதேவேளை, அந்தப் பகுதியிலுள்ள பங்குச் சந்தை விலைகள் பெரும்பாலும் அதிகரித்தது.
2025ஆம் ஆண்டில் தங்கமும் வெள்ளியும் சாதனை உயரத்தை எட்டியிருந்தாலும், ஆண்டின் கடைசி சில நாட்களில் அவற்றின் விலைகள் பின்னடைவை சந்தித்தன.
2025 ஆம் ஆண்டு வரலாறு காணத அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிகரித்து. பின்னர் ஆண்டு இறுதியில் சில நாட்களில் விலைகள் குறைந்தன.
அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் விலை குறைந்த போதிலும், தங்கம் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதன் சிறந்த வருடாந்திர செயல்திறனைக் கண்டது.
டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி அன்று 60% க்கும் அதிகமாக அதிகரித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு விலை 4,549.71 அமெரிக்க டொலர்களை எட்டியது.
வட்டி விகிதக் குறைப்புகளுக்கான எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிகளால் பெரிய அளவில் தங்கத்தை வாங்குவது மற்றும் உலகளாவிய பதட்டங்கள் மற்றும் பொருளாதார ஸ்தீரமற்ற தன்மை குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த இலாபங்கள் உந்தப்பட்டன.
ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் ஏற்ற இறக்கமாக இருந்தது, மேலும் வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டமையினால் மசகு எண்ணெய் விநியோகத்தை பாதிக்கலாம் என முதலீட்டாளர்கள் கருதியதால் ஆரம்ப வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமாக இருந்தது. மேலும் காலை நடுப்பகுதியில் சற்றுக் குறைந்தது.
மதுரோ சிறைப்பிடிக்கப்பட்டமைக்கு பின்னர், வெனிசுவேலாவின் பரந்த எண்ணெய் இருப்புக்களைப் பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சபதம் செய்துள்ளார். மேலும் அமெரிக்கா "பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றத்தைச் செய்யக்கூடிய காலம் வரும் வரை நாட்டை வழி நடத்தும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தொழில்துறை ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கை மக்களும் வணிகங்களும் எரிசக்திக்கு எவ்வளவு பணம் செலுத்துகின்றன என்பதில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
2000 களின் முற்பகுதியில் இருந்து கடுமையான சரிவைச் சந்தித்து வரும் வெனிசுவெலாவின் எண்ணெய் உட்கட்டமைப்பை சரிசெய்ய பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



.jpg)



.jpg)

.jpeg)


