சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரல் !


தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றமை தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்விசாரணைகளின் போது சாட்சிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய, குற்றச் செயலுக்காக வந்த துப்பாக்கிதாரியின் புகைப்படம் ஒன்று AI தொழில்நுட்பத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புகைப்படத்தில் உள்ள சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கம் :- பொறுப்பதிகாரி, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு 071-8596408