யாழ்ப்பாணத்தில் நேற்று (10) சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில், காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொட்டடி பகுதியை சேர்ந்த 23வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன், அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் ரயில் கடவையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிளில் ரயில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த ரயில் கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதுடன், பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, அதனை பாதுகாப்பான ரயில் கடவையாக மாற்றுமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுகிறது.





.jpg)





.jpg)

