மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை !


காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணித்தியாலங்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு - வடமேற்கு திசையில், தீவின் கிழக்கு கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்த சில நாட்களில், நாடு முழுவதும் கடல் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், மேலும் குறித்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது