இந்த வருடம் இவ்வாறான மோசடிகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், திட்டமிட்டவகையில் சட்டத்தை அமுல்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்போது, பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கு இலக்கங்கள், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல், QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களை பெற்று, நிகழ்நிலையில் வேளைவாய்ப்பு வழங்குவதாக பண மோசடிகள் இடம்பெறகின்றமை அவதானிக்கமுடிந்துள்ளது.
எனவே, சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது, அவதானமாக செயற்படுமாறும், விளிப்புடன் இருக்குமாறும் இலங்கை பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகளை வேலைவாய்ப்புகள் தருவதாக கூறும் அறிமுகமில்லாத நபர்கள், அறிமுகமற்ற குழுக்களுக்கு வழங்க வேண்டாம்.
அறிமுகமில்லாத நபர்கள் அல்லது சமூக ஊடக குழுக்கள் பகிரும் இணைய இணைப்புகள் மற்றும் ஞசுஃஸ்கேன் குறியீடுகளை பயன்படுத்த வேண்டாம்.
அறிமுகமில்லாத நபர்களுக்கு இணைய வழியினூடாக பணம் செலுத்துதல், வங்கி விபரங்களை பகிர்தல், தனிப்பட்ட கணக்குகளை பிறருக்க பயன்படுத்த அனுமதியளித்தல் போன்றவற்றை தவிர்க்கவும்.
கணக்கு இலக்கம், கடவுச்சொல்/QR குறியீடுகள் போன்றவற்றை அறிமுகமில்லாதவர்களுக்கு பகிர வேண்டாம்.
அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் தொலைபேசி செயலிகளை நிறுவும்போது, இணைய இணைப்புகளை பயன்படுத்தும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, சாதனத்தின் அனுமதி வழங்குவதை தவிர்க்கவும்.
சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது இவ்வாறான விதிமுறைகளை பின்பற்றவேண்டுமென இலங்கை பொலிஸ், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.





.jpg)





.jpg)

