ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கவோ நாங்கள் செயற்பட போவதில்லை. ஏனெனில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கே எதிராக அமையும். எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தவறை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அரசாங்கத்துக்கு இல்லை.
புதிய கல்வி கொள்கை அரசாங்கத்துக்கு எதிரானதாகவே திரும்பியுள்ளது. இலங்கைக்கு பொருத்தமான வகையில் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்த வேண்டுமே தவிர மேற்குலக நாடுகளுக்கு பொருத்தமான வகையில் அல்ல என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை புத்தகத்தில் இருந்து நீக்குவதாக கல்வி அமைச்சர் குறிப்பிடுகிறார்.இது அரச நிதி முறைக்கேடு இல்லையா, இந்த செயற்பாட்டுக்காக நாங்கள் நிச்சயம் வழக்குத் தாக்கல் செய்வோம்.
ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. பாடப்புத்தகத்தை கூட முறையாக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும். இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது ஒற்றையாட்சிக்கு முழுமையாக எதிரானதாகவும் நாட்டை பிரிக்கும் வகையில் தான் அமையும்.
ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று தேவையற்ற விடயங்களை முன்னெடுக்காமல் பதவி காலத்தை நிறைவு செய்து விட்டு வீடு செல்லுமாறு அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம் என்றார்.





.jpg)





.jpg)

