
உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
இதன்படி, உலகின் பிரதான சந்தைகளில் தங்கத்தின் விலை 4,600 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 84 டொலர்களைத் தாண்டிய நிலையில் பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வேகமாக அதிகரித்து வந்தமை அவதானிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒரு நாளில் நியூயோர்க் வர்த்தகப் பரிமாற்றத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 சதவீதத்தால் அதிகரித்து 4,612 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
லண்டன் சந்தையிலும் தங்கத்தின் விலை சுமார் 2 சதவீத அதிகரிப்புடன் 4,600 டொலர்களைத் தாண்டியுள்ளது.
இதேவேளை, நியூயோர்க் வர்த்தகப் பரிமாற்றத்தில் வெள்ளியின் விலை சுமார் 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 84 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
லண்டன் சந்தையிலும் வெள்ளியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், அதுவும் 84 டொலர்களாகக் பதிவாகியுள்ளது.
இதேவேளை, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று (12) தங்கத்தின் விலை 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 365,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 337,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.




.jpg)





.jpg)

