
பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
இன்று (12) மாலை பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.




.jpg)





.jpg)

