காலி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) இரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காலி நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தேவையற்ற கடதாசிகள் சிலவற்றை தீ வைத்து எரித்த போது தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறிருப்பினம் தீ பரவலின் போது நீதிமன்ற ஆவணங்களுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





.jpg)





.jpg)

