பல கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது




90 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் முச்சக்கரவண்டியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.