பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் தகாத மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செய்துள்ளமை தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பிப்பதாகவும், இதன்படி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார்.
முறைப்பாட்டை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை கேவலமாக பேசினார்.
பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் எனது ஆசனம் இருப்பது தொடர்பிலும் பேசினார். இது பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது .
இதனால் இன்றில் இருந்து எனது ஆசனத்திற்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். தொடர்ந்தும் இவர் தனது வலது பக்கத்தில் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக்கூற முடியாது.
இதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தகுதியற்றவர்.இதனால் அந்தக் குழுவில் இருந்தும் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.




.jpg)




.jpg)



