
கட்டுநாயக்க விமான நிலையத்தில் "கிரீன் சேனல்" வழியாக 36,45,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை வெளியே கொண்டு செல்ல முயன்ற இலங்கை பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், மாவத்தகம பகுதியை சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (10) அதிகாலையில் 02.00 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-232 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
வெளிநாட்டுத் தயாரிப்பான 20,700 "பிளாட்டினம்" மற்றும் "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் மற்றும் 36 மின்னணு சிகரெட்டுகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)





.jpg)

