சிறுவர் பெண்கள் மீதான வன்முறையினை தடுப்பதற்கு பொலிஸ்மா அதிபரினால் உருவாக்கப்பட்டுள்ள சறோஜா வேலைத்திட்டத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள்,பஸ்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
மட்டக்களப்பு நகரிலிருந்து சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர தலைமையில் பிரதி பொலிஸ்மா அதிபர் களுபஹன, மட்டக்கள்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லீலாரத்ன,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்எம்.ஜமீல்,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர் பண்டார ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சறோஜா வேலைத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் - மட்டக்களப்பு நகரிலிருந்து சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கைகள்
Posted by Battinews on Tuesday, January 6, 2026




.jpg)




.jpg)



.jpeg)