புதையல் தோண்டிய தேரர் கைது



அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

119 எண் ஊடாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு செல்லும் போது சந்தேக நபரான தேரர் தனியாகவே 04 அடி ஆழம் வரை தோண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.