.jpeg)
நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தில் இன்று (12) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
தொழிலாளர்கள் குழுவினர் இணைந்து தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டை கழுகு கொத்தி கலைத்ததால் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல் மேற்கொணடுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது
நானுஓயா கிரிமிட்டி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சடையன் லெட்சுமி வயது (78) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் தொழிலாளி, குளவிக் கொட்டுக்கு இலக்காகிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தொழிலாளியின் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)





.jpg)

