நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (10) மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குச்சவெளி - பள்ளிமுனை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய, ஆடு ஒன்றை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ரஸ்நாயக்கபுர - தலாகொலவேவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வன்னி - ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வன விலங்குகளிடமிருந்து தனது பயிர்களைப் பாதுகாக்க, சட்டவிரோதமாக கட்டப்பட்ட மின்சார கம்பியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


.jpeg)


.jpg)





.jpg)

