ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த அரசாங்கம் நாட்டின் தேசியம் மற்றும் கலாசாரத்துக்கு எதிராகவே செயற்படுகிறது.ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் மகாநாயக்க தேரர்களை தேடிச் செல்கிறார்களே தவிர பௌத்த கோட்பாட்டை முன்னிலைப்படுத்தி அரச தலைவர்கள் செயற்படவில்லை.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவே பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள்.
தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாங்கள் அரசாங்கத்தின் தேசியத்துக்கு எதிரான செயற்பாட்டுக்கு ஆதரவளிக்க போவதில்லை.
அரச நிதி மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அரச நிதி மோசடியாளர்களாக உள்ளார்கள்.
அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மாறாக நடவடிக்கை எடுக்கும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
சட்டத்தின் ஆட்சி தற்போது தெரிவு செய்யப்பட்ட வகையில் செயற்படுத்தப்படுகிறது. ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்டம் ஒருதலைபட்சமாக செயற்படுத்தப்படுகிறது.இது முற்றிலும் தவறானது என்றார்.





.jpg)





.jpg)

